Connect with us

தரையில படுத்து தூங்கினாரு விஜய்.. மும்பையில கூடுன கூட்டம் உண்மையானது.. 10 வருடம் கழித்து ‘தளபதி’ படத்தின் உண்மைகளை பகிர்ந்த இயக்குனர்..!

CINEMA

தரையில படுத்து தூங்கினாரு விஜய்.. மும்பையில கூடுன கூட்டம் உண்மையானது.. 10 வருடம் கழித்து ‘தளபதி’ படத்தின் உண்மைகளை பகிர்ந்த இயக்குனர்..!

விஜய் நடிப்பில் வெளிவந்த தலைவா திரைப்படத்தில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை அப்படத்தில் இயக்குனரான ஏஎல் விஜய் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் பெறுபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தலைவா. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருப்பார். மேலும் சந்தானம், நாசர், மனோபாலா, சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

   

மும்பை தமிழர்களுக்கு அரணாக இருக்கும் தந்தை மறைவிற்குப் பின்னர் நடிகர் விஜய் தலைவராக வந்து மும்பை மக்களை பாதுகாக்கின்றார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத வில்லன் கதாநாயகனை கொல்ல நினைக்கின்றார். அது மட்டும் இல்லாமல் தனது காதலியே போலீசாக மாறி தன்னை காட்டிக் கொடுத்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தவிக்கும் விஜய் மற்றும் தலைவனாக மக்களை காக்கும் விஜய் என்று படத்தின் கதை நகரும்.

 

இந்த திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பு பல பிரச்சனைகளை சந்தித்தது. அதிலும் ‘டைம் டு லீட்’ என்ற இப்படத்தின் டைட்டில் கேப்சனால் படத்தின் தள்ளிப்போனது. பண்டைய தமிழக முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா அவரை இந்த திரைப்படம் கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக கூறப்பட்டது. பின் திட்டமிட்டபடி தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி 2013 ஆம் ஆண்டு வெளியானது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் ஆகஸ்ட் 20ஆம் தேதி தான் இந்த திரைப்படம் வெளியானது. பிற மாநிலங்களில் படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாக தொடங்கியதால் தமிழ்நாட்டிலும் பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை. ஒரு நல்ல திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்காதது என்பது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியதாக நடிகர் விஜய் கூட பலபேட்டியில் கூறியிருப்பார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனரான ஏஎல் விஜய் அந்த திரைப்படத்தில் நடந்த சம்பவம் குறித்து பேசி இருந்தார். அதில் பேசிய அவர் “ஆஸ்திரேலியாவில் நாங்கள் படத்தின் சூட்டிங் எடுத்துக் கொண்டிருந்தபோது அதில் பல பிரபலங்கள் டான்சர்களாக பங்கேற்று இருப்பார்கள். அவர்களுடன் மிக சகஜமாக பேசி பழகினார். நடிகர் விஜய் ஷூட்டிங் முடித்துவிட்டு கிடைக்கும் இடத்தில் விரித்து படுத்துவிடுவார். அதைப் பார்க்கும்போது எனக்கு மிக எளிமையாக தோன்றியது.

கேரவன் இருந்தும் அவர் அவ்வளவு எளிமையாக நடந்து கொண்டார். அதைத் தொடர்ந்து மும்பையில் தாராவி பகுதியில் படத்தின் சூட்டிங் எடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு கூட்டத்தில் நடிகர் விஜய் கை காட்டுவது போல் காட்சி இடம் பெற்றிருக்கும். அது உண்மையாகவே நடந்த ஒரு சம்பவம் விஜய்யை பார்ப்பதற்கு அத்தனை ரசிகர்கள் அங்கு திரண்டார்கள். மேலும் போலீஸ் கூட தங்களிடம் வந்து இது பழைய பிரிட்ஜ் இடிந்து விடும்.

அதனால் உடனே விஜய்யை வந்து கைகாட்டி விட்டு செல்லுங்கள் என்று கேட்ட பிறகுதான் அந்த நிகழ்ச்சி நடந்தது அதை நான் கேப்ச்சராக எடுத்துக்கொண்டு அதனை படத்தில் பயன்படுத்திக் கொண்டேன் என்று கூறியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு நாங்கள் பட்ட கஷ்டத்தை எங்களால் சொல்ல முடியாது. எங்களுடன் சேர்ந்து நடிகர் விஜய்யும் பல கஷ்டப்பட்டார் என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார் ஏஎல் விஜய்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top