Categories: சினிமா

“அது மட்டும் வொர்க் ஆகலன்னா நான் வாழ்க்க முழுக்க பெட்லதான் இருக்கணும்…” சுந்தர் சி-யிடம் அஜித் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

ஆக்‌ஷன் பாதைக்கு திரும்பும் முன்னர் அவர் நடித்த குடும்ப பாங்கான கதைகளில் ஒன்றுதான் உன்னைத் தேடி. இந்த படத்தை இந்த டெம்ப்ளேட்டுக்கு என்றே இருக்கும் இயக்குனரான சுந்தர் சி இயக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம் அஜித்.

இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஜித் கடுமையான முதுகுவலிப் பிரச்சனையால் அவதிப்பட்டாராம். அப்போது அஜித் தன்னுடைய உடல்நிலை குறித்து பகிர்ந்த தகவலை சுந்தர் சி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “அஜித் ஒருநாள் என்னிடம் வந்து எனக்கு கடுமையான முதுகுவலி பிரச்சனை உள்ளது. அதற்காக நான் அறுவை சிகிச்சை செய்யவேண்டும்.

இந்த அறுவை சிகிச்சை நன்றாக நடந்தால் பிரச்சனை இல்லை. ஒருவேளை ஆப்பரேஷன் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றால் நான் என் வாழ்க்கை முழுக்க படுக்கையிலேயே கிடக்க வேண்டியதுதான். அதனால் என்னை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விடுங்கள்” எனக் கூறினார்.

அவ்வளவு உடல்நலப் பிரச்சனைகளோடும் அவர் அந்த படத்தில் கஷ்டப்பட்டு அர்ப்பணிப்போடு நடித்தார் என்றும் கூறியுள்ளார் சுந்தர் சி.

vinoth

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

9 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

9 மணத்தியாலங்கள் ago