Categories: சினிமா

காதல் கோட்டை படத்தின் போது பாடாய் படுத்திய தங்கர் பச்சன்.. நடந்ததை விவரித்த தேவயானி..

Spread the love
1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. அஜித், தேவயானி நடித்த இந்த படத்தில் கரண் தலைவாசல் விஜய், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பார்த்துக் கொள்ளாமலே காதல் என வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் தங்கர் பச்சன். பொதுவாக அதிகப்படியான தங்கர் பச்சன் படங்களில் கதாபாத்திரங்கள் கூடுதல் ஒப்பனை இல்லாமல் எளிமையாக இருப்பார்கள்.

அதேபோன்றுதான் இந்த படத்திலும் தேவயானி கதாபாத்திரம் அமைந்திருக்கும். இந்த படத்தின் கதை தொடக்கத்தில் பல தயாரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டாலும் இறுதியில் விருது பெற்ற படமாக வெற்றி படமாக திகழ்ந்தது.

சமீபத்தில் இந்த படத்தில் நடித்த தேவயானியின் நேர்காணல் வெளியாகி இருந்தது. அதில் காதல் கோட்டை படம் பற்றி அவர் கூறிய போது தங்கர்பச்சான் பற்றி பகிர்ந்திருந்தார். அதாவது படப்பிடிப்பு தளத்திற்கு மேக்கப் போட்டுவிட்டு வந்தால் தங்கர் பச்சன் திட்டுவாராம்.

காதல் கோட்டை படத்தில் தேவயானி கையில் எப்போதும் ஏதாவது ஒரு மணி பர்ஸ், ஹேண்ட் பேக், சூட்கேஸ் போன்றவை இருந்திருக்கும். ஆனால் அதையும் அவர் காலியாக கொடுக்க மாட்டாராம். படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்கள் சூட்கேஸில் ஒன்றும் வைக்காமல் எளிதாக தூக்கும்படி கொடுத்தால் தங்கர் பச்சன் திட்டி விடுவாராம்.

இருக்கும் பொருள் எல்லாவற்றையும் அதனுள் வைத்து கணமாக இருந்தால் தான் நடக்கும் போது உடல் அசைவுகள் சரியாக இருக்கும் என்பது தங்கர் பச்சனின் எண்ணம். அதேப்படி தான் அனைத்தும் நடக்குமாம். இதை தான் தேவயானி பகிர்ந்திருந்தார்.

indhuramesh

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

12 minutes ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

16 minutes ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

17 minutes ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

19 minutes ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

23 minutes ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

27 minutes ago