Categories: சினிமா

GOAT படத்தின் டிரைலரை பார்த்து அஜித் சொன்னது… உண்மையை போட்டுடைத்த வெங்கட் பிரபு..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மைக் மோகன் உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஜய் தனது 69-வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேரமாக அரசியல் ஈடுபடபோவதாக ஏற்கனவே அறிவித்தார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் தொடங்கிவிட்டார்.

விஜயின் 69-ஆவது படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். நேற்று கோட் படத்தின் டிரைலர் வீடியோ ரிலீஸ் ஆகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. ட்ரெய்லரில் அப்பாவாக வரும் விஜய்க்கு வெங்கட் பிரபு காந்தி என பெயர் வைத்துள்ளார். சினேகா பேசும் டயலாக்கில் இருந்து கோட் திரைப்படம் சென்டிமென்ட், ஜாலி, சேட்டை, ஆக்சன் கலந்த படமாக இருக்கும் என தெரிகிறது.

நேற்று கோட் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வெங்கட் பிரபு மேடம் கோர் படத்தின் டிரைலரை பார்த்தா அஜித் மங்காத்தா படத்தை போல 100 மடங்கு இருக்கிறது என சொன்னாரா என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு நான் டிரைலரை பர்சனலாக அஜித் சாருக்கு அனுப்பி வைத்து விட்டேன். அவர் சொன்ன எல்லா விஷயத்தையும் இங்கு சொல்ல முடியாது. நிறைய பேசினோம். ட்ரைலரை பார்த்து விட்டு அஜித் சார், டேய் சூப்பர் டா ட்ரெய்லர் சூப்பரா இருக்கு. தளபதி விஜய்க்கும், படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து விடு என கூறியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

முன்னதாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் போது அஜித் வெங்கட் பிரபுவிடம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மங்காத்தா படத்தைப் போல 100 மடங்கு இருக்க வேண்டும் என கூறியதாக ஏற்கனவே வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். டிரெய்லர் சிறப்பாக அமைந்ததால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

admin

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

7 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

8 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

8 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago