தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் பொங்கல் ரேசில் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட விடா முயற்சி திரைப்படம் கடைசி நேரத்தில் அதிலிருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து இந்த படம் இம்மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் அதன் அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களின் சூட்டிங் மற்றும் படப்பிடிப்பு என அடுத்தடுத்த வேலைகளை முடித்துக் கொடுத்து விட்ட அஜித் துபாயில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்பதற்காக சென்று உள்ளார்.
முன்னதாக சிங்கப்பூரில் தன்னுடைய குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் தான் மட்டும் துபாய் சென்ற நிலையில் ஷாலினி உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் சென்னை திரும்பினார். இந்த நிலையில் ரேசில் பங்கேற்பதற்காக அடுத்தடுத்த பயிற்சிகளில் அஜித் ஈடுபட்ட வீடியோக்கள் வெளியானது. இப்படியான நிலையில் நேற்று துபாய் 24H கார் பந்தய ரேசிலிருந்து அஜித் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பயிற்சியின்போது அவருடைய கார் விபத்துக்குள்ளானதால் ஒரு போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளதாகவும் ஆனால் porsche Gt4 போட்டியில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கார் பந்தயம் நடந்த இடத்திற்கு அஜித் வந்த நிலையில் அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அனைவரும் தல என்று உற்சாகமாக கத்திய நிலையில் அஜித்தும் அவர்களை பார்த்து கையசைத்தார். இந்த நிலையில் அஜித் நேற்று கொடுத்த பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் பேசினாக ரேசிங் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஏராளமான ரசிகர்கள் நேரில் வந்தது தன்னை எமோஷனல் ஆகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ரசிகர்களுக்கு நான் கூற வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அவர்கள் அனைவரும் சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ தான் கடவுளை வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். ஃபேமிலியை பார்த்துக் கொள்ள வேண்டும்.
நேரத்தை யாரும் வீணடிக்க வேண்டாம். நன்றாக படித்து வேலைக்கு செல்பவர்கள் அதில் கவனம் செலுத்தவும். நமக்கு பிடித்த விஷயங்களை செய்யும் போது தோல்வி ஏற்பட்டால் சோர்ந்து விட வேண்டாம் என்று அஜித் கூறியுள்ளார். ரேசிங் குறித்தும் பல விஷயங்களை பேசிய அவர் திரை துறையைப் போலவே இந்த துறையிலும் அவருடைய டீம் வொர்க் பிரதானம் என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் இந்த வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் மீண்டும் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க