12 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் இருந்த மதகஜராஜா திரைப்படம் இந்த பொங்கலுக்கு ரிலீசுக்கு நாங்களும் போட்டிக்கு வரலாமா என்று அதிரடியாக களமிறங்கியுள்ளது. ஜனவரி 12ஆம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் கடந்த ஜனவரி 5ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர் சி மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய விஷால் மிகுந்த கை நடுக்கத்துடனும் குரல் நடுக்கத்துடனும் பேசினார். இதனைத் தொடர்ந்து விஷாலுக்கு என்ன ஆனது என்று அனைவரும் பதறிப் போன நிலையில் கடந்த ஒரு வாரமாக விஷால் குறித்த செய்திகள் தான் இணையத்தில் உலா வந்தது.
விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இந்த நிலையில் இருந்து விஷால் விரைவில் மீண்டும் வர வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் விஷாலுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் குடிக்கு அடிமையாகி விட்டார் என்று பல வதந்திகளும் பரவிக் கொண்டிருந்தது. இப்படியான நிலையில் நேற்றைய தினம் நடந்த மதகஜராஜா படத்தின் பிரீமியர் ஷோவில் நடிகர் விஷால் பழைய உற்சாகத்துடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த நிகழ்ச்சியில் என் நிலையை பார்த்த பலரும் மெசேஜ் மூலமாகவும் தொலைபேசி மூலமும் என்னிடம் நலம் விசாரித்தார்கள்.
இந்த அளவிற்கான அன்பை உண்மையில் நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லோருக்கும் மிக்க நன்றி. இவ்வளவு அன்புக்கு நான் கடமைப்பட்டுள்ளேன், அடிமையாக இருக்கிறேன். நிறைய பேர் நான் அப்பல்லோ காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக எழுதினர். ஆனால் நான் எங்கும் அட்மிட் ஆகவில்லை. மார்க் ஆண்டனி படத்தில் சொல்வது போல, நான் வீழ்வேன் என்று நினைத்தாயா? நான் விழ மாட்டேன் என்பதை தான் இங்கு சொல்ல நினைக்கிறேன். என்னுடைய தன்னம்பிக்கையும் என் அப்பாவின் தன்னம்பிக்கையும் தான் என்னுடைய பலம்.
இந்த இரண்டும் இருக்கும் வரை எந்த ஒரு தடையையும் சர்ச்சையையும் நான் தாண்டி வருவேன். நிறைய பேர் மூன்று மாதம் 6 மாதம் ஷூட்டிங் வரமாட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள். அதெல்லாம் கிடையாது. நான் நலமாக தான் இருக்கிறேன். லவ் யு ஆல். எல்லோரின் அன்புக்கும் நன்றி. சத்தியமாக நான் சாகும் வரை இந்த அன்பை எல்லாம் மறக்க மாட்டேன் என்று விஷால் பழையபடி பேசிய நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
.@VishalKOfficial is perfectly fine & fit! 🔥👌🏻At the #MadhaGajaRaja press premiere, Vishal addressed & dismissed all baseless rumors about being admitted to any hospital. He ended his fiery speech with, “IPO MIC LAM CORRECT-A PUDIKIRAN” & a power-packed #MarkAntony dialogue. 🔥 pic.twitter.com/Koj4LcOjv4
— KARTHIK DP (@dp_karthik) January 11, 2025