தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை நித்யா மேனன். இவர் அடுத்தடுத்த முன்னாடி நடிகர்களுடன் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகின்றார். இவருடைய அடுத்தடுத்த படங்கள் கவனம் பெற்று வருகின்றன. தமிழில் தனுசு உடன் நித்யா மேனன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்காக நித்யாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக ஜெயம் ரவி மற்றும் நித்தியா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. கிருத்திகா உதயநிதி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வரும் நித்யா மேனன் தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதன்படி தற்போது மிஸ்கினுடன் இணைந்து நித்யா மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசினார். அதில், காதலிக்க நேரமில்லை படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபல இயக்குனரான பாண்டிராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் சேர்ந்து நடிக்க உள்ளேன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிஸ்கின் நடிக்க வேண்டியது. ஆனால் அவர் பண்ணவில்லை. அவர் கூட சேர்ந்து நடிக்க நானும் ரொம்ப ஆவலோடு காத்திருந்தேன். அவர் மட்டும் நடிச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கு.
ஆனா மிஸ்கின் நடிக்கவில்லை என்று நித்யா மேனன் கூறிய நிலையில் அப்போது பேசிய மிஸ்கின், இது பாண்டிராஜனின் சதி தான். அவன் என்கிட்ட வந்து அண்ணா நீங்க தான் பண்ணனும் என்று கேட்டான். எத்தனை நாள் என்று கேட்டதும் 44 நாட்கள் என்று சொன்னான். அய்யய்யோ அது உன் பாதி படத்தோட சம்பளம் தான் என்னுடையது என்று சொன்னேன். நான் அங்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என்றால் நிறைய செலவு இருக்கு அதனால எனக்கு 5 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டேன். அந்த சம்பளத்தை கொடுத்து இருந்தா நடிச்சிருப்பேன். ஆனா சம்பளத்தை சொன்னதும் தல தெரிக்க ஓடிட்டான் என்று மிஸ்கின் கூறியுள்ளார்.
“I was offered for a pivotal role in VijaySethupathi – NithyaMenen film🌟. Director Pandiraj asked 45 Days shooting for that role🎬. I asked 5Crs salary, after hearing the salary i demanded, they ran away😄”
– Mysskin pic.twitter.com/4VibjrVwNN— AmuthaBharathi (@CinemaWithAB) January 11, 2025