நடிகர் விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் அதன் பிறகு முழு நேர அரசியல் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பலருக்கும் இந்த செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் விஜய் நடத்திய தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டுக்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரன்டதால் அவருடைய அரசியல் என்ட்ரி அட்டகாசமாக ஆரம்பமாகி உள்ளது. இப்படி விஜய் சினிமாவை விட்டு விலகிய நிலையில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மகனை ஹீரோவாக்க வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு இருந்தது. இதற்காக பல முன்னணி இயக்குனரிடம் கதை கேட்டு வந்தார்.

ஆனால் சஞ்சய் தனக்கு நடிப்பில் விருப்பமில்லை என்று சொன்னதால் அவருடைய விருப்பப்படி என்ன செய்ய விரும்புகிறாரோ அதே செய்யட்டும் என்று விஜய் விட்டுவிட்டார். இதனிடையே கடந்த ஆண்டு நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாகவும் அவர் இயக்க உள்ள முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை.

அந்த படத்தில் நடிக்க ஹீரோ கிடைக்காமல் திண்டாடிய விஜய் மகன் இறுதியாக நடிகர் சந்திப் கிஷனிடம் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் லைகா நிறுவனத்தின் மெத்தன போக்கால் பிராஜெக்ட் தள்ளி போக்கிக்கொண்டே இந்தநிலையில் ஜேசன் சஞ்சய் இந்த நிறுவனத்தை விட்டே விலகிடலாமான்னு நினைத்துக்கொண்டு இருந்தாராம். அப்போது ஜேசன் சுரேஷ் சந்திரனுக்கு போன் போட்டு வேறு எங்காவது போகலாமான்னு கேட்டுள்ளார்.

அப்போது அங்கே பக்கத்தில் அஜித் இருந்துள்ளார். இவர் பேசும்போது அஜித் யாருனு கேட்டுள்ளார். விஜய் சார் பையன் என்று சொன்னதும் அஜித் போனை வாங்கி அஜித் பேசி வாழ்த்தியுள்ளார். பின்னர் உனக்கு இங்கே ஏதும் பிரச்சினை இருந்தா சொல்லு நான் உனக்கு நல்ல நிறுவனங்கள் இருந்த சொல்றேன். எப்போ நீ இது வேண்டாம்னு நினைக்குரியோ தயங்காம சொல்லு நான் கம்பெனி சொல்றேன்னு சொன்னாராம். அனால் இதற்கிடையில் லைகா நிறுவனம் வேலையை ஆரம்பித்து விட்டது.
