தன்னை தானே வாடகைக்கு விடும் நபர்… சும்மா இல்லங்க… லட்சத்துல வருமானம்…

By admin on தை 13, 2025

Spread the love

முந்தைய காலகட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா என குழந்தைகள் அனைத்து சொந்தங்களுடன் இணைந்து வளர்ந்தனர். அதனால் பல நல்ல குணங்களை கற்றுக் கொண்டனர். அடுத்த தலைமுறை வரும்பொழுது கூட்டுக் குடும்பத்திலிருந்து உடைந்து தனி குடித்தனம் என்று செல்ல ஆரம்பித்தார்கள். தனிக்குடித்தனத்தில் அம்மா அப்பா அவர்களோடு மட்டுமே இந்த குழந்தைகள் வளர்ந்து வந்தார்கள். அதனால் தாத்தா பாட்டி அரவணைப்பு கிடைக்காமல் போனது. தற்போதைய சூழலில் அந்த தனி குடித்தனத்தில் இருந்தே பிரிந்து ஒவ்வொருவரும் வேலை நிமித்தமாக ஒவ்வொரு இடத்தில் வாழ்கிறார்கள். இதனால் பலரிடம் தனிமை குடிகொள்கிறது.

   

இந்த தனிமையை போக்குவதற்கு பலர் நல்ல வழியில் செல்பவரும் இருக்கிறார்கள். சிலர் கெட்டவையான விஷயங்களிலும் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த மக்களின் தனிமையை போக்குவதையே ஒரு தொழிலாக எடுத்து செய்து லட்சத்தில் வருமானம் பார்த்து வருகிறார் ஜப்பானை சேர்ந்த ஒரு நபர். அவரைப் பற்றி இனி காண்போம்.

   

ஜப்பானை சேர்ந்த 41 வயது நபரான சோஜி மோரிமோட்டோ தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 2018 ஆம் ஆண்டில் அவர் சரியாக வேலை செய்யவில்லை எனக்கூறி அவரது நிறுவனம் இவரை பணிநீக்கம் செய்துள்ளது. அதனை தொடர்ந்து சோஜி எடுத்த வித்தியாசமான ஒரு முடிவு பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவருக்கு அது லட்சக்கணக்கான வருமானத்தையும் கொடுத்திருக்கிறது.

 

அதாவது சோஜி தனிமையில் துணை இல்லாமல் தவிப்பவர்கள் தன்னை துணையாக சில நேரத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அவரை வாடகைக்கு எடுப்பவர்கள் அவருடன் உரையாடலாம், வீடியோ காலில் பேசலாம், வெளியே ஊர் சுற்றுவதற்கு அழைத்து செல்லலாம், படங்களுக்கு கூட்டி செல்லலாம், டின்னர் சாப்பிடலாம் என அவரது லிஸ்டில் பல அம்சங்கள் இருக்கிறது. இதற்காக சோஜி 3 மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் 16 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்.

இதைப் பற்றி சோஜி கூறுகையில், “இது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தினமும் எனக்கு ஆயிரக்கணக்கான அழைப்புகள் வருகிறது. என்னை நானே வாடகைக்கு விடுவதன் மூலம் நான் ஆண்டுக்கு 65 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். அவர்களுக்கு Moral சப்போர்ட்டாக இருப்பேனே தவிர பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு நான் உடன்படுவதில்லை” என்று சோஜி கூறியுள்ளார். இதையறிந்த பலர் ஓஹோ இதுல இவ்வளவு சம்பாதிக்கலாமா என்று ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.