Categories: சினிமா

ஷாலினி எனக்காக செய்த தியாகம்.. என்ன சாதாரண மனுஷனா நினைச்சு அப்படி கூப்பிட்டால் போதும்.. அஜித்தின் நெகிழ வைக்கும் பேட்டி..!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் தனித்துவமான பண்பை கொண்டவர். சினிமாவில் நடிப்பதோடு தன்னுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைக்கக் கூடியவர் தான் அஜித். கடந்த சில வருடங்களாகவே எந்த வித டிவி சேனல்களிலும் அல்லது தனிப்பட்ட முறையிலும் youtube சேனல்களுக்கு கூட இவர் பேட்டியளிப்பதை தவிர்த்து வருகின்றார். அதனைப் போலவே பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் கூட அஜித் பங்கேற்பது கிடையாது. சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவதில் ஆர்வம் காட்டக் கூடியவர். கார் பந்தயங்கள் மூலம் அவரது கனவை நிறைவேற்றும் வேளையில் முழு ஈடுபாட்டோடு செய்து கொண்டிருக்கின்றார். அதில் தொடர்ந்து பல சாதனைகளையும் செய்து வருகிறார்.

சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கக்கூடிய அஜித்குமாரின் செயலை பாராட்டும் விதமாக நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கிய கௌரவித்தார். அப்போது அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவருடைய மகன், மகள் அனைவரும் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி இருந்தது. மேலும் பத்மபூஷன் விருதுடன் நடிகர் அஜித் தன்னுடைய குடும்பத்தினருடன் அன்பை பகிர்ந்து கொண்ட காட்சிகளும் வெளியானது. விருது பெற்றதைத் தொடர்ந்து அஜித் பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திற்கு நேர்காணலில் பேட்டி அளித்த போது பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார். அதில், இன்னும் மனதளவில் மிடில் கிளாஸ் ஆகத்தான் நான் உணர்கிறேன். பத்மபூஷன் என்று சொன்னால் என்னால் நம்ப முடியவில்லை.

இதை வாங்கியதை நினைத்து பெருமையாக கருதுகின்றேன். கொஞ்சம் உணர்ச்சியாகவும் உள்ளது. இதுபோன்ற விருதுகளை வாங்கும் போது தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரிகின்றது. நான் சரியான பாதையில் இருப்பதைப் போல உணர்கிறேன். எனக்கு மிகப்பெரிய பலம் என்னுடைய குடும்பம் தான். என்னுடைய பெற்றோர், சகோதரர்கள், மனைவி ஷாலினி மற்றும் எனது குழந்தைகளுக்கும் நன்றி. என்னுடைய வெற்றி தோல்வி என அனைத்திலும் உறுதுணையாக இருப்பது அவர்கள் தான். என் மனைவி ஷாலினி எனது வெற்றிக்கு தூணாக உள்ளார்.

இந்த நேரத்தில் அவரைப் பற்றி பேசுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நான் ஷாலினியை திருமணம் செய்த போது பிரபல நடிகையாக இருந்தார். எனக்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். எனக்காக அவர் பல தியாகங்களையும் செய்துள்ளார். நான் எடுத்த எல்லா முடிவுகளிலும் பக்க பலமாக இருந்துள்ளார். எனக்கு கிடைக்கும் எந்த அங்கீகாரமும் எனது மனைவிக்கு சேரும். சூப்பர் ஸ்டார் மற்றும் தல பட்டங்கள் என இந்த பட்டங்களில் எல்லாம் எனக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது.

சினிமாவில் நடிப்பதற்காக நல்ல சம்பளம் வாங்குகின்றேன். இந்தப் பட்டங்கள் எனக்கு எப்போதும் தேவையில்லை. சினிமாவை தாண்டி எனக்கு வேறு வேலைகள் பல கனவுகள் உள்ளது. இதனால் அஜித் குமார் AK, அஜித் என்று என் பெயரை சொல்லி கூப்பிட்டாலே எனக்கு போதும். இதைத் தாண்டி நான் எனக்குப் பிடித்த வேலைகளை விரும்பி செய்கின்றேன். என்னை எவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்ள முடியுமோ அதே அளவு சாதாரணமாக இருக்கின்றேன். நான் எந்த துறையில் வெற்றி பெற்றாலும் அன்பு மாதரமும் அள்ளித்தரும் மக்களுக்கு நன்றி கடன் பட்டிருப்பதாகவே உணர்கிறேன் என அஜித் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago