சினிமாவை பொறுத்தவரையில் எத்தனையோ நடிகர் நடிகைகள் உள்ளே நுழைந்தாலும் அவர்களில் ஒரு சிலரால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடிகிறது. ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு முன்னணி நடிகர் நடிகைகளாக வளர்ந்தவர்களும் உண்டு. அதனைப் போலவே முன்னணி நடிகர் நடிகைகளாக வளர்ந்தும் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனவர்களும் உள்ளனர். அதே சமயம் பல திரைப்படங்களில் நடித்தும் இதுவரை சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்து கிடைக்காத பிரபலங்களும் உண்டு. அப்படிதான் தற்போது உருவாகியுள்ள குற்றம் தவிர் திரைப்படத்தின் ஹீரோயினி ஆராதியா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீ சாய் சைந்தவி க்ரியேஷன் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் குற்றம் தவிர். இந்த திரைப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடித்துள்ள நிலையில் சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, ஜார்ஜ் விஜய் மற்றும் மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நாயகி ஆராதியா, மதிமாறன் படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதன் மூலம் என்னை அனைவருக்கும் தெரிய வைத்த இயக்குனர் மந்த்ராவிற்கு நன்றி. சினிமாவில் நுழைந்து நான் இதுவரை 12 திரைப்படங்கள் நடித்திருக்கிறேன். அதில் ஒரே ஒரு திரைப்படம் தான் வெளியாகி இருக்கிறது. மற்ற திரைப்படங்கள் எதுவும் வெளியாகாதது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இந்த படத்தில் தயாரிப்பாளர் அவரது குழுவினர் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். முதன்முதலாக இந்த படத்தில் நான் நடனமாடி நடித்திருக்கிறேன். அந்த காட்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்று ஆராதியா பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…