சூர்யாவுக்காக அஜித் செய்த பெரிய விஷயம்.. இதுக்கு தான் எல்லாரும் அவரை Gentle Man-னு சொல்றாங்க..

By admin on மார்கழி 11, 2023

Spread the love

சமீபத்தில் இயக்குநர் அமீர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகியான சிவசக்தி பாண்டியனுக்காக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் தயாரித்து இயக்கிய பருத்திவீரன் படத்தை தயாரிப்பாளர் தரப்பில் பஞ்சாயத்து பண்ணிய அவரிடம் இருந்து படத்தை பிடுங்கி கொண்டனர் என்ற உண்மையை அந்த அறிக்கை சொன்னது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியதாவது, எத்தனையோ பிரச்னைகளை தயாரிப்பு கவுன்சில் மூலம் தீர்த்த நிலையில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோரை அழைத்து அமரவைத்து பேசி அரைமணி நேரத்தில் இந்த பிரச்னையை தீர்த்திருக்க முடியும். பருத்திவீரன் செம ஹிட் ஆகி அப்போதே 26 கோடி ரூபாய் வசூலாகி கொழுத்த லாபத்தை கொடுத்திருந்தது. அமீரை பழிவாங்கும் நோக்கத்தில் மட்டுமே அவர்கள் நடந்துக்கொண்டுள்ளனர்.

Ajith Kumar

Surya

வாடிவாசல் படத்தை பொறுத்த வரை சூர்யா, அமீர் பஞ்சாயத்து முடிந்தபின்புதான் படப்பிடிப்பு நடத்தப்படும். வாடிவாசல் படத்தில் அஜீத்குமார் நடிக்கிறாரா என்ற கேள்வி வெற்றிமாறன் தரப்பில் எழுந்த போது, இல்லை. இது சூர்யாவுக்காக உருவாக்கப்பட்ட கதை. அவர் நடிக்க வேண்டிய கேரக்டரில் நான் நடிப்பது தவறு. எனக்கு விடாமுயற்சி படம் இருக்கிறது. அது முடிந்தவுடன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படம் இருக்கிறது. வாடிவாசல் படத்தில் சூர்யாவே நடிக்கட்டும் என வாடிவாசல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை சூர்யாவுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார் அஜீத்குமார். அதுதான் நல்ல மனிதர்களின் பெருந்தன்மையான பண்பு.

   
   
Ajith Kumar

Ajith Kumar

 

அதே வேளையில் இனியும் அமீர் நடிப்பதால் நான் நடிக்க மாட்டேன் என பிடிவாதம் பிடித்துக்கொண்டோ, படத்தில் நடிக்க மாட்டேன் என அடம்பிடித்தாலே அது மிக நல்ல வாய்ப்பை சூர்யா இழப்பதாகவே இருக்கும். ஏனென்றால் மற்ற யாராக இருந்தாலும் சூர்யா நடிக்காவிட்டால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். நான் நடிக்கிறேன் என வெற்றிமாறன் அலுவலகத்தில் போய் உட்கார்ந்து கொள்வார்கள். இது மிக முக்கியமான ஒரு படம். சி.சு செல்லப்பாவின் ஒரு படைப்பிலக்கியம். மணிரத்னம், ஷங்கர் வரிசையில் வெற்றிமாறன் படங்களில் நடிக்க எல்லோரும் நடிக்க விரும்பும் காலகட்டம் இது. அஜீத் விட்டுக்கொடுத்த பின்பும், வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்காவிட்டால் அது அவருக்கு தான் ஏமாற்றமாக அமையும் என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.