சமீபத்தில் தான் அஜித் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார், ஆனால் கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காமல் மீண்டும் பைக் ரைட் கிளம்பியுள்ளார். தற்போது பைக் ரைட் சென்றுள்ள அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith in dubai
துணிவு படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர். இப்படத்தில் இரன்டு கட்ட படப்பிடிப்பும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. படப்பிடிப்பு சில காலம் தடைபட்ட சமயத்தில் குடும்பத்துடன் சேர்ந்து துபாய்க்கு சுற்றுலா சென்றார் அஜித்.

Ajith in hospital
அதன்பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜித் சமீபத்தில் தான் வீடு திரும்பினார். அவர் சென்னை வந்த சமயத்தில் தான் அவரின் நீண்ட கால நண்பர் உயிரிழந்தார். நிலைமை இப்படி இருக்க திடீரென அஜித்தும் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில் தான் அவர் சிகிக்சை முடிந்து வீடு திரும்பினார்.

Ajith in biketrip with his team
The Class by ….. Today#Ajithkumar pic.twitter.com/9P6dj3vFac
— Suresh Chandra (@SureshChandraa) March 20, 2024
அதேசமயம் விடாமுயற்சியின் அடுத்தகட்ட படப்பிடிப்பும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் தான் அஜித் மீண்டும் பைக்கில் சுற்றுலா சென்றுள்ளார். மத்திய பிரதேசம் சென்றுள்ள அஜித் தன்னுடன் பயணித்தவருக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ட்ரிப்பில் நடிகர் ஆரவ் இணைந்துள்ளார். அநேகமாக இந்த ட்ரிப் முடிந்தபின் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.