ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தி பாடல்களைதான் அதிகமாக கேட்டு வந்தனர். அந்த போக்கை முற்றிலுமாக மாற்றியவர் இசைஞானி இளையராஜா. அதன் பிறகு அடுத்த தலைமுறை இசையமைப்பாளராக வந்த ஏ ஆர் ரஹ்மான் வட இந்திய ரசிகர்களையும் தமிழ் பாடல் கேட்கவைத்தார் என்று சொல்லப்படுவது உண்டு.
அப்படி 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகாமனார் ஏ ஆர் ரஹ்மான். முதல் படத்துக்கே தேசிய விருது பெற்றார். அதன் பிறகு அவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. ரஹ்மானை மிகச்சிறப்பாக பயன்படுத்தி தங்கள் திரைப்படங்களை தமிழை தாண்டியும் பல மொழிகளில் வெற்றிப் படங்களாக ஆக்கிய இயக்குனர்கள் மணிரதனமும், ஷங்கரும்தான்.
![]()
ஷங்கரின் முதல் படமான ஜெண்டில்மேன் படத்துக்கு சூப்பர் ஹிட் ஆல்பத்தைக் கொடுத்த ரஹ்மான், அடுத்து காதலன் திரைப்படத்துக்கும் இணைந்து பணியாற்றினர். காதலன் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக ஏ ஆர் ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் அமைந்தன.
இந்நிலையில் காதலன் படத்தின் ரிலீஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக படத்தின் ஒட்டுமொத்த பின்னணி இசையும் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காணாமல் போய்விட்டதாம். இதனால் படக்குழுவினர் அனைவரும் பதற்றமாகியுள்ளனர். ஆனால் ஏ ஆர் ரஹ்மான் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக தொழுகைக்கு சென்றுவிட்டாராம்.
![]()
தொழுகையை முடித்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து பின்னணி இசையை அமைக்க தொடங்கினாராம். எந்த தொய்வும் இல்லாமல் ஒரு நாளுக்குள்ளாகவே மொத்த படத்துக்குமான பின்னணி இசையை அமைத்து முடித்துவிட்டாராம். அதன் பின்னர்தான் படம் அறிவிக்கப்பட்ட தேதியில் எந்த தாமதமும் ரிலீஸ் ஆனதாம்.
