பிக்பாஸ் பிரபலத்துக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருளை பரிசாக கொடுத்த தல அஜித்.. ரெண்டு பேருக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?

By admin on சித்திரை 10, 2024

Spread the love

நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

   

சமீபத்தில் அஜித்தும் ஆரவும் ஒரு காரில் சென்ற போது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சிகளை பட குழுவினர் பகிர்ந்தனர். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ரிஸ்க் எடுத்து படபடத்தை நடத்துகிறார்களா என கமெண்ட் செய்து வந்தனர்.

   

 

இந்த நிலையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருளை வாரி வழங்கும் அளவுக்கு அஜித்தின் மனதில் இடம் பிடித்து விட்டார். இருவரும் இணைந்திருக்கும் போட்டோஸ் சமூக வலைதளத்தில் வைரலானது. அதற்கு முக்கிய காரணம் ஆரவும் ஒரு பைக் ரேசர் என்பதுதான். சமீபத்தில் அஜித்துடன் ஆரவ் பைக்கில் சென்றுள்ளார்

அவருக்காக 35 லட்சம் மதிப்புள்ள ஒரு பைக்கை அஜித் அளவுக்கு வாங்கி கொடுத்துள்ளார். யாரையும் எளிதில் நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொள்ளாத அஜித் ஆரவ் மீது பாசம் வைத்து அவருக்காக பைக் வாங்கி கொடுத்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.