25 வருடங்களை கடந்த ‘படையப்பா’.. தமிழ் சினிமாவில் இதுவரை செய்ய முடியாத சாதனையை நிகழ்த்திய படம்..!!

By admin on சித்திரை 10, 2024

Spread the love

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் படையப்பா. இந்த படம் கடந்த 1999-ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்துள்ளார்.

   

மேலும் ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, அப்பாஸ், நாசர், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரஜினியின் தந்தையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்துள்ளார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

   

 

ஏ.ஆர் ரகுமான் இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தது. படையப்பா படத்தில் இடம் பெற்ற மின்சார பூவே, என் பேரு படையப்பா, சுத்தி சுத்தி வந்தீங்க, வெற்றி கொடி கட்டு ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. இன்றுடன் படையப்பா படம் ரிலீஸ் ஆகி 25 ஆண்டுகளை கடந்தது.

இந்நிலையில் 210 பிரண்டுகள் மற்றும் 9 லட்சம் ஆடியோ கேசட்டுகளுடன் உலகம் முழுவதும் வெளியான முதல் திரைப்படம் படையப்பா தான். 90’s காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் படையப்பா படம் 61 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக 50 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது படையப்பா திரைப்படம்.