Connect with us

CINEMA

என் கிட்டயே உங்க வேலைய காட்டுறீங்களா?- தளபதி 69 திரைப்படத்தின் தயாரிப்பாளரை வெளியே துரத்திய விஜய், இவ்வளவு கோபமா?

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் “GOAT” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்து வருகிறார். மேலும் பிரசாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 69 ஆவது திரைப்படத்தில் இயக்குனர் ஹெச்.வினோத்துடன் இணைய உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்தது. இத்திரைப்படத்தை “RRR” திரைப்படத்தின் தயாரிப்பாளரான தானய்யா தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.

   

இந்த நிலையில் “தளபதி 69” திரைப்படத்தை குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “தளபதி 69” திரைப்படம் குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ ஒப்பந்தமும் கையெழுத்தாகாத நிலையில் தயாரிப்பாளர் தானய்யா, “தளபதி 69” திரைப்படத்தை விநியோகிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

விஜய்க்கு மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதாலும் அதே போல் ஹெச்.வினோத்தும் ஒரு முன்னணி இயக்குனராக திகழ்கிறார் என்பதாலும் இந்த இருவரின் பெயர்களை பயன்படுத்தி “தளபதி 69” திரைப்படத்தை தயாரிப்பாளர் தானய்யா சில பகுதிகளில் விநியோகம் செய்து வியாபாரம் பார்க்க முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்த ஒரு முறையான ஒப்பந்தமும் கையெழுத்து ஆகாமலேயே “தளபதி 69” திரைப்படத்தை வைத்து வியாபாரம் செய்ய முயன்றதில் தயாரிப்பாளர் மீது கடும் கோபம் கொண்ட விஜய், “உங்கள் நிறுவனத்திற்கு நான் இப்போதைக்கு படம் எதுவும் நடிக்கப்போவதில்லை” என கூறிவிட்டாராம். இதனால் “தளபதி 69” திரைப்படத்தை “RRR” தயாரிப்பாளர் தானய்ய தயாரிக்கப்போவதில்லை என தகவல்கள் வெளிவருகின்றன. “தளபதி 69” திரைப்படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Continue Reading

More in CINEMA

To Top