மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சமுத்திரகுமாரியாக பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். தமிழில் விஷால் நடித்த ஆக்சன் திரைப்படம் மூலமாக நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதன்படி கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி, தக் லைஃப் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கதாநாயகியாக மட்டுமல்லாமல் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். அதாவது சாய்பல்லவி நடித்த கார்கி திரைப்படத்தை இவர்தான் தயாரித்திருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த பூங்குழலி கதாபாத்திரம் இவருக்கான ஒரு அடையாளத்தை கொடுத்தது.
இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதால் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
