திருச்சியில் தமிழக வெற்றி கழகம் கட்சியினரின் உற்சாக வரவேற்ப்பால் விஜயின் வாகனம் நகர முடியாமல் சிக்கி தவிக்கிறது. காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் பேசி முடிக்க போலீசார் விஜய்க்கு அனுமதி அளித்திருந்தனர். விஜய், TVS டோல்கேட்டை கடக்காத நிலையில் மரக்கடை பகுதிக்கு செல்ல இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என தெரிகிறது. நேரத்தை கடந்து மரக்கடை பகுதியில் பேசினால் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது. இதனால் அரியலூர் மற்றும் பெரம்பலூர் பிரச்சார நேரத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது .இது விஜய்க்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
