அதிமுக கோட்டையில் கை வைத்த செந்தில் பாலாஜி… கூண்டோடு திமுகவில் ஐக்கியம்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Nanthini on ஐப்பசி 31, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. இதில் செந்தில் பாலாஜியின் பங்கு என்பது சற்று அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் கோவை மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரும், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான செங்கம் புதூர் செந்தில் திமுகவில் இணைந்துள்ளார். கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் செந்திலின் ஆதரவாளர்கள் சிலரும் திமுகவில் இணைந்தனர். அதிமுகவின் கோட்டையாக உள்ள கோவையில் 2026 தேர்தலில் கணிசமாக வெற்றியை பதிவு செய்ய கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை திமுகவில் சேர்க்கும் படலம் தொடர்ந்து வருகிறது.