“எடப்பாடிக்கு துரோகம் பண்ணலனு முருகன் கோயில்ல சத்தியம் பண்ணுங்க”…. சி.வி.சண்முகத்தை கிழித்து தொங்கவிட்ட அதிமுக நிர்வாகி…. வெளியான திடுக்கிடும் தகவல்….!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி, மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு அதிமுக கிளியனூர் ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம் பகிரங்க சவால் விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே நடைபெற்ற கிளியனூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கழகத்தைக் காத்து வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உட்கட்சித் துரோகங்கள் நடைபெற்று வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வந்துவிடக் கூடாது என்ற துரோக நோக்கத்துடன் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சுமார் 25 மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டதாக பக்தவச்சலம் சாடினார். இவர்கள் தங்களின் பினாமிகளுக்குத் தொகுதிகளைப் பெற்றுத் தந்து, சரியான முறையில் தேர்தல் பணிகளைச் செய்யாமல் கழக வேட்பாளர்களைத் தோற்கடித்துள்ளனர் என்றும், இதன் காரணமாகவே தமிழகத்தில் சுமார் 25 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

மேலும், தொண்டர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கவே மாவட்டங்களை மூன்றாகப் பிரித்து பொதுச்செயலாளர் நடவடிக்கை எடுத்தார் என்றும், ஆனால் தான் மட்டுமே ‘குறுநில மன்னராக’ இருக்க வேண்டும் என்ற பேராசையால் சி.வி.சண்முகம் இதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் சாடினார். “கழகத்திற்கும் எடப்பாடியாருக்கும் தான் துரோகம் செய்யவில்லை என்றால், சி.வி.சண்முகம் தனது பிள்ளைகளுடன் முருகன் கோயிலுக்கு வரட்டும்; நானும் என் பிள்ளைகளுடன் வருகிறேன். கழக வேட்பாளர்களைத் தோற்கடிக்கவில்லை என்று கோயிலில் இறங்கி சத்தியம் செய்ய அவர் தயாரா?” என்று அவர் நேரடி சவால் விடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி சாதாரணக் கிளைச் செயலாளராகத் தொடங்கி, தன் உழைப்பால் பொதுச்செயலாளராக உயர்ந்தவர் என்றும், அவரைப் பற்றிப் பேச சி.வி.சண்முகத்திற்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பா.ம.க. கூட்டணியைத் தொடர்ந்து தடுத்து வரும் சி.வி.சண்முகம், முன்னாளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவாலும் கட்சி விரோத நடவடிக்கைக்காக ஓரங்கட்டப்பட்டவர் என்று விமர்சித்த பக்தவச்சலம், 99 சதவீத தொண்டர்கள் எடப்பாடியாரின் பக்கமே உறுதியாக இருப்பதாகவும், வரும் காலத்தில் அவர் மீண்டும் முதலமைச்சராக அமர்வது உறுதி என்றும் அழுத்தமாகக் கூறினார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

6 minutes ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

12 minutes ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

24 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

27 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

36 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

44 minutes ago