தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக தலைமை ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு இருக்க மறுப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருகின்றார். இவர்களுக்கு இடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் புதிய ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். என்னதான் மற்ற கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுகவின் கூட்டணி என்பது பலமாக உள்ளது. அதனால் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
இந்நிலையில் இபிஎஸ் இன் நம்பிக்கைக்குரியவராக திகழும் தங்கமணி அதிமுகவிலிருந்து விலக இருப்பதாகவும் அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள தங்கமணி, தனது உயிர் மூச்சு இருக்கும் வரை அதிமுகவில் தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். தான் செத்தாலும் உடலில் அதிமுக கொடியை தான் போர்த்த வேண்டும் என்றும் அவர் உருக்கமாக குறிப்பிட்டார்.
