வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்… இரவோடு இரவாக வந்த அறிவிப்பு… இனி அவ்வளவுதான்..!

By Nanthini on ஆவணி 14, 2025

Spread the love

அண்மையில் மாதாந்திர மினிமம் பேலன்ஸ் தொகையை ஐசிஐசிஐ வங்கி 50,000 ரூபாயாக உயர்த்தியது. இதற்கு பொதுமக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதை குறைப்பதாக வங்கி அறிவித்துள்ளது. அதன்படி நகர்ப்புற கிளைகளில் மினிமம் பேலன்ஸ் இனி 15000 ரூபாயாகவும், செமி ஹர்பன் கிளைகளில் 7,500 ரூபாய் மற்றும் கிராமப்புற கிளைகளில் 2,500 ரூபாயாக இருக்கும். தவறினால் 500 ரூபாய் அல்லது பற்றாக்குறை தொகையில் ஆறு சதவீதம் இதில் குறைவான தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.

ஆகஸ்ட் 1 முதல் கணக்கு தொடங்கியவர்களுக்கு நகர்ப்புற சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் பத்தாயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் ஆகவும், ஊரகப் பகுதிகளில் இந்த தொகை 10,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பள மற்றும் BSBDA கணக்குகளுக்கு இந்த மாற்றம் பொருந்தாது. பழைய வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.