திடீர் ட்விஸ்ட்… அதிமுக – தவெக கூட்டணி… ஆதவ் அர்ஜுனா போடும் ஸ்கெட்ச்…!

By Nanthini on ஐப்பசி 21, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலைமை மாறி விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கரூர் விவகாரத்தை தொடர்ந்து அறிவிக்கப்படாத கூட்டணியாக தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக செயல்பட்டு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன. திமுகவுக்கு எதிராக செயல்படுவது தான் விஜயின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதை பாஜக சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனிடையே விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிச்சாமிக்கும் விஜய்க்கும் இடையே நடுவன் பாலமாக இருந்து இருவரையும் ஒரே பாதையில் இழுத்து செல்ல செயல்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.