சென்னை கிண்டியில் தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஓபிஎஸ் தேசி ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது .அதற்கு பதில் அளித்த அவர், ஓபிஎஸ் ஏற்கனவே அழிந்துவிட்டார். திமுகவோடு கள்ள உறவு வைத்திருந்தவர். சட்டசபையில் ஒருமுறை பேசும்போது கருணாநிதி போட்டோவை தன்னுடைய அப்பாவின் புகைப்படத்தோடு வைத்து சாமி கும்பிட்டு விட்டு தான் மற்ற வேலையை செய்வோம் என்று அவர் சொன்ன அன்றே அவர் கள்ள உறவில் இருந்தது தெரிந்துவிட்டது.
அந்த கள்ள உறவு என்று உறுதிப்படுத்தி உள்ளார் .இது எங்களுக்கு லாபம் .அவருக்கு அழிவு. ஓபிஎஸ் தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டார். கள்ள உறவுக்காரர் என்ற பட்டத்தையும் சூட்டி கொண்டார் என்று கூறியுள்ளார் . மேலும் எடப்பாடி பழனிசாமி சொல்லி தான் பிரதமர் மோடி தன்னை சந்திக்கவில்லை என்று ஓபிஎஸ் கூறுகிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த பொன்னையன், “அது உண்மை இல்லை. செல்லாக் காசாக கடலில் மூழ்கி விட்ட ஒரு துரோகி என்ற பட்டத்தை வென்றவர். அவரைப் பற்றி ஏன் பேசுகிறார்கள்? என்று கூறியுள்ளார்.
