“புரியாம படிச்சி நேரத்தை வீண் பண்ணாதீங்க”.. அம்மா நான் சாகப் போறேன்… உருக்கமான கடிதத்துடன் கல்லூரி மாணவி தற்கொலை…!

By Nanthini on ஆவணி 4, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் மத்தியில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் செய்தியை எடுத்தாலே அப்பா அம்மா திட்டி விட்டதால் தற்கொலை, காதலன் காதலியோடு சண்டை போட்டுக் கொண்டதால் தற்கொலை என ஏராளமான தற்கொலை சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு சிறிய விஷயத்திற்கு கூட மனம் தாங்க முடியாமல் இன்றைய இளைஞர்கள் தற்கொலை தான் தீர்வு என்பதை அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். அவர்களின் இத்தகைய முடிவால் பெற்றோர்கள் தான் பேரிழப்பை சந்திக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

புரியவில்லை என்றால் என்னைப்போல் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம், அம்மா நான் சாகப் போறேன் என அம்மாவுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஹன்மகொண்டாவை சேர்ந்த ஷிவானி என்ற பெண் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவருடைய தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.