வங்காள மொழியை “வங்கதேசத்தின் மொழி” என்று டெல்லி போலீசார் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது வங்காள மொழியை “வங்கதேசத்தின் மொழி” என்று டெல்லி போலீசார் குறிப்பிட்டுள்ளது நம்முடைய தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கு நேரடியான அவமானம்.
மேலும் இது தற்செயல் பிழையோ, தவறோ அல்ல. பன்முக தன்மையை தொடர்ந்து குறை மதிப்பீடு செய்யும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை காட்டுகிறது. ஹிந்தி அல்லாத மொழிகள் மீதான இது போன்ற தாக்குதலை எதிர்கொண்டு மம்தா பானர்ஜி மேற்குவங்க மக்களுக்கும், அம்மொழிக்கும் கேடயமாக நிற்கிறார் என்று கூறியுள்ளார்.
