தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக அரசியலில் இறங்கிய பிறகு திமுக மற்றும் அதிமுகவுக்கு மிகப்பெரிய போட்டியாக மாறியுள்ளது. விஜயின் வருகை ஆளும் கட்சியான திமுகவிற்கு பெரிய சிக்கலாகவே மாறியுள்ளது.
அதேசமயம் திமுகவை தோற்கடிக்க அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விஜயுடன் கூட்டணி அமைக்க தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் விஜய்யை முதல்வர் வேட்பாளராக இருக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தமிழக வெற்றி கழகம் திட்டவட்டமாக கூறி வருகிறது. அதேசமயம் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்த பிறகு அதிமுகவிலிருந்து முக்கிய புள்ளிகள் பலரும் தொடர்ந்து விஜய் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் JCD பிரபாகரனை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், விஜய் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக் கூறியிருந்தார். தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. JCD பிரபாகரன் தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ளார்
தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்…
கல்வி கட்டண விவரங்களை வெளியிடாத தனியார் பள்ளிகள் குறித்து ஜூன் 10-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை…
திமுக மற்றும் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில் தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகியிருப்பது திமுக…
அயதுல்லா மொஜ்தபா கமேனி மார்ச் மாதம் ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது நாட்டின்…
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம்.…
கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், பா.ஜ.கவிலிருந்து அண்ணாமலை விலகியது அவருக்கு ஏற்பட்ட வேதனையின் காரணமாக இருக்கலாம் என்றும், அவர்…