BREAKING: இரவோடு இரவாக திமுகவில் இணைந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Nanthini on ஆவணி 7, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி முதல்வர் ஸ்டாலின் தன் கூட்டணியை பலமாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த முறையும் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதற்காக முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இணைக்கும் பணியை நிர்வாகிகளுக்கு ஒதுக்கியுள்ளார்.

அதன்படி தற்போது கரூர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் பொன் அழகிரி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தமிழ்ச்செல்வன் உள்ளிட்டு 50 பேர் திமுகவில் இணைந்தனர். நேற்று இரவு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் இந்த இணைப்பு நடைபெற்றது. கரூரில் செந்தில் பாலாஜி, எம்ஆர் விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைத்து வருவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.