என் சாவுக்கு திமுகவினர் தான் காரணம் என்று ஆடியோ வெளியீட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பெள்ளம்பட்டி செங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான செல்வானந்தம். மனைவி முத்து பிரியாவுடனும் மகனுடனும் வசித்து வந்த நிலையில் அதிமுகவின் குண்டடம் மேற்கு தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் ஆக பொறுப்பு வகித்து வந்துள்ளார். கடந்த ஆறு வருடங்களாக செல்வனந்தம் மக்காசோளம் வாங்கி விற்பனை செய்து வந்தார்.
இப்படியான நிலையில் தொழில் சம்பந்தமான பிரச்சனையில் திமுக மதுரை மண்டல பொறுப்பாளராக இருக்கும் மணிமாறன், மதுரை தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களாக தன்னை மிகவும் டார்ச்சர் செய்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் செல்வானந்தம் குற்றம் சாட்டியுள்ளார். சங்கிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் செல்வாநந்தம் விஷமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன்பு செல்வானந்தம் செல்போனில் பதிவு செய்திருந்த ஆடியோவில், மதுரை மண்டல திமுக பொறுப்பாளர் மணிமாறன், மதுரை தெற்கு மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமரன் இருவரும் சேர்ந்து மக்காச்சோள வியாபாரத்தில் தன்னை ஏமாற்றி விட்டனர். பணம் தர வேண்டும் என்று காவல்துறையினர் மூலம் அழுத்தம் கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டனர். இதுவரை 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ள நிலையில் தொடர் மிரட்டல்கள் விடுத்தும் அடிக்கடி என்னை அவமானப்படுத்தியும் பணம் கேட்டு மிரட்டினர்.
என் மனைவி பெயரில் உள்ள ஆயில் மில் மீது மோசடி வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டினர். தொழிலில் பலர் என்னை ஏமாற்றி விட்டார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்போது உயிரை மாய்க்கும் விளக்கி வந்து விட்டேன். நான் போனதுக்கு அப்புறம் என்னோட குடும்பத்தை யாரும் துன்பப்படுத்தக் கூடாது. நான் போனதே போதும், தயவு செஞ்சு யாரும் யாரையும் ஏமாத்தாதிங்க, என்னால முடியல என்று கண்ணீரோடு செல்வானந்தம் அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வானந்தம் மனைவி உரிய ஆதாரங்களுடன் தன் கணவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
