1 இல்ல 2 இல்ல 70 பேர்..! அதிமுக, பாஜக, பாமக கட்சியினரை கொத்தாக தூக்கிய ஸ்டாலின்… திமுகவிற்கு கூடும் பலம்..!!

By Soundarya on புரட்டாதி 27, 2025

Spread the love

காஞ்சிபுரத்திற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக, பாஜக, பாமகவினர் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவரும் ,ஒன்றிய முன்னாள் முதலமைச்சர் பேரம்பாக்கம் பகதூர்சேட் தலைமையில், காஞ்சிபுரம் மாநகராட்சி 16வது வார்டு கவுன்சிலர் சாந்தி துரைராஜ்,

27 வது வார்டு கவுன்சிலர் ஷாலினி, அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜன் காந்தி, பாமக பெரியாநத்தம் பெருமாள் என்ற ரமேஷ், இந்திய குடியரசு கட்சி மண்டல பொறுப்பாளர் சம்பத் உள்ளிட்ட அதிமுக, பாஜக, பாமக கட்சிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்துள்ளார்கள்.