பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 96 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. 96 படத்தின் 2-வது பாகத்தினை பிரேம்குமார் எழுதினார். முதல் பாகத்தில் முடிவிலிருந்து இரண்டாவது பாகம் தொடங்கும் என அவர் கூறியிருந்தார். 96 படத்தின் இரண்டாவது பாகத்தினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டபோது அதில் நடித்த நடிகர்கள் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.
இதனால் அவர்களது சம்பளம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இரண்டாவது பாகத்தின் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டனர். சமீபத்தில் இயக்குனர் பிரேம்குமார் அளித்த ஒரு பேட்டியில் முதல் பாகத்தில் உள்ள நடிகர்கள் இல்லாவிட்டால் இரண்டாவது பாகத்தினை உருவாக்கவே மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளார். ஏற்கனவே 96 படத்தின் இரண்டாவது பாகத்தின் கதையைப் படித்து விட்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒரு தங்க செயினை குமாருக்கு பரிசாக வழங்கியுள்ளார். அந்த அளவுக்கு கதை அருமையாக இருந்துள்ளது. ஆனால் அது படமாக உருவாகுமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
