“உங்களுக்கெல்லாம் சீட்’ கிடையாது..?” அதிமுக புள்ளிகளுக்கு பல்பு… தவெக எடுத்த திடீர் முடிவால் ஷாக்…!!

By Soundarya on ஆனி 28, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுக உள்ளிட்ட பிற கட்சி நிர்வாகிகளுக்கு, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு (சீட்) வழங்கப்படாது என்ற தகவல் பரவி, அவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாரிசு அரசியல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த நிர்வாகிகள், தங்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படாதது மற்றும் பழைய நிர்வாகிகளின் புறக்கணிப்பால் அதிருப்தியில் உள்ளனர்.

குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நெருக்கமான மதுரையைச் சேர்ந்த பல நிர்வாகிகள் இத்தாவலில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழலில், ஆரம்பத்தில் இருந்தே உழைத்த தவெக தொண்டர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பளிக்க தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்குப் பதவி மட்டுமே வழங்கப்படலாம் என்பதால், மீண்டும் அதிமுக செல்ல முடியாமலும், தவெக-வில் தொடர்ந்து இருக்க முடியாமலும் நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.