“சிஎம் மேல பழி போடுறீங்களா?”.. அது என்ன புது உருட்டா இருக்கு?”.. விஜய் பேச்சுக்கு அதிமுக கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!

By Muthu Mani on ஆனி 2, 2026

Spread the love

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில், முதல்வரும் தவெக தலைவருமான விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். முதல்வரின் இந்த தற்பெருமை பேச்சுக்கு (Narcissistic Speech) கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, அவர் தனது பதவிக்கான பொறுப்பை உணராமல், ஆட்சியில் நடக்கும் குற்றங்கள், மரணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாதுகாப்புக்குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்காமல் கவலையின்றிப் பேசியுள்ளதாகக் காட்டமாக விமர்சித்துள்ளது.

எல்லாவற்றிற்கும் முந்தைய ஆட்சிதான் காரணம் என்று முதல்வர் கூறுவதைக் சாடியுள்ள அதிமுக, “இதைத்தான் நீங்கள் ஆட்சி மாற்றம் என்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. தான் ஆட்சிக்கு வரக் கூடாது என கூட்டுச் சதி செய்ததாகக் கூறும் முதல்வர், தனது குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் ஆதாரம் காட்ட முடியுமா என்றும், சினிமாவில் பேசுவது போல் கத்திப் பேசினால் பொய்கள் உண்மையாகிவிடாது என்றும் தனது அறிக்கையில் அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது.

   

மேலும், தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அதிமுக, அதற்கு அமமுக சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி என்று கூறியுள்ளது. அதோடு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார பலத்தால் விலைபேசி, ராஜினாமா செய்ய வைத்துத் தவெகவில் இணைத்துக் கொண்ட அரசியல் கேவலத்தைப் பற்றி முதல்வர் ஏன் வாய் திறக்கவில்லை என்றும், 24 மணி நேரமும் அதிமுகவில் இருந்து யாரை இழுக்கலாம் என்ற நினைப்பிலேயே தவெக இருப்பதாக விமரிசித்துள்ளது.

   

இறுதியாக, மக்களை ஏமாற்றுவதிலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதிலும் திமுகவை மிஞ்சும் வகையில் தவெக செயல்படுவதாக அதிமுக சாடியுள்ளது. எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்று எச்சரித்துள்ள அதிமுக, உலகமே உங்களைச் சுற்றித்தான் இயங்குவது போல் நசநசவெனப் புலம்ப வேண்டாம் என்றும், நீங்கள் கோட்டுப் போட்டுக் கொள்வதைப் பற்றியோ, போயஸ் கார்டனில் வீடு வாங்குவதைப் பற்றியோ தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் காரசாரமாகத் தெரிவித்துள்ளது.