திமுகவுக்கு வந்த புதிய சிக்கல்.. காலையிலேயே ஸ்டாலின் தலையில் இறங்கிய பேரிடி.. அரசியலில் புதிய பரபரப்பு…!!

By Muthu Mani on ஆனி 2, 2026

Spread the love

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து பணம் கட்டிய திமுகவினர், தற்போது தங்களது பணத்தைத் திரும்பக் கேட்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய் மற்றும் தவெக அரசை எதிர்கொள்ள திமுக தயாராகி வரும் நிலையில், வரும் தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த கட்சியினர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முன்னதாக விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15,000 முதல் ரூபாய் 25,000 வரை திமுக தலைமை நிர்ணயித்திருந்தது. பலரும் தங்களுக்குத் தொகுதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஆர்வத்துடன் இந்த தொகையைச் செலுத்தியிருந்தனர்.

இருப்பினும், தொகுதிப் பங்கீடு இறுதியான பிறகு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் விருப்ப மனு அளித்த திமுகவினருக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் திரும்பத் தரப்படும் என அண்ணா அறிவாலயம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து எந்தெந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்குச் செல்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டதால், அந்தந்த தொகுதிகளில் பணம் கட்டிய திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது பணத்தை உடனே திரும்பத் தருமாறு கட்சித் தலைமையிடம் கோரிக்கை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.