அதிமுகவில் நடந்த அதிரடி மாற்றம்… எடப்பாடி எடுத்த திடீர் முடிவு… பரபரப்பில் அரசியல் களம்..!!

By Soundarya on புரட்டாதி 13, 2025

Spread the love

அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன. அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.

இது அதிமுகவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக அதிமுகவில் நீக்கம், மாற்றம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவில் புதிய மண்டல ஐடி விங் நிர்வாகிகளை எடப்பாடி அறிவித்துள்ளார். அதன்படி வேலூர் மாநகர் – S.தரணிதரன், வேலூர் புறநகர் நாகேந்திரன், திருப்பத்தூர்- மணிகண்டன், தி.மலை வடக்கு-ஜானி, தி.மலை தெற்கு -ரித்தீஷ், தி.மலை கிழக்கு-அக்ரி பாலாஜி, தி.மலை மத்தி-ராஜசேகர், ராணிப்பேட்டை கிழக்கு – நிவாஸ், ராணிப்பேட்டை மேற்கு -சரவணன் ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பேர் கொண்ட குழுக்களை அமைத்துள்ளார்.