எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டீங்களா.. ? ஈஷா சத்குரு பேசிய வீடியோவால்… 3.75 கோடியை தொலைத்த பெண்.. வேலையை காட்டிய மோசடி கும்பல்..!!!

By Divyamayakannan on புரட்டாதி 13, 2025

Spread the love

பெங்களூரில் சி.வி.ராமன் நகரை சேர்ந்த 57 வயது பெண். காவல் துறையில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் சமூக வலைத்தளத்தில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி ஈஷா அறக்கட்டளையின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதை போன்ற வீடியோ ஒன்றை பார்த்தேன். பங்குச் சந்தையில் ரூபாய் 25 ஆயிரம் முதலீடு செய்தால் வட்டியுடன் 100 நாட்களுக்குப் பின்பு வட்டியுடன் திரும்ப பெறலாம் என கூறப்பட்டிருந்தது.

வாலித் என்பவர் என்னை தொடர்பு கொண்டு நிறுவனத்தின் whatsapp குழுவில் சேர்த்தார். இதுவரை இரண்டு தவணையாக 3 கோடியே 75 லட்சத்து 72 ஆயிரத்து 121ஐ வங்கி கணக்கில் முதலீடு செய்துள்ளேன். நூறு நாட்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த ஒரு பணமும் கைக்கு வந்து சேரவில்லை. போலீசார் விசாரணையில் ஏஐ டீப் ஃபேக் வீடியோ உருவாக்கி மோசடி செய்து வந்தது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்பதற்காக போலீஸ் சார் முயற்சிக்கு செய்து வருகிறார்கள். மோசடி கும்பலையும் வலைவீசி தேடி வருகிறார்களாம்.