7 வயது சிறுவனின் மண்டை ஓட்டை திறந்து அறுவை சிகிச்சை.. அரசு மருத்துவர்கள் சாதனை.. நெகழ்ச்சி சம்பவம்..!!

By Divyamayakannan on புரட்டாதி 13, 2025

Spread the love

விருதுநகர், அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் 7 வயது சிறுவன் பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டிருந்தார். மண்டை ஓட்டை திறந்து அறுவை சிகிச்சை நடந்தது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த அரசு மருத்துவர்கள். இதைப் பற்றி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயசிங் செய்தியாளர்களிடம் பேசிவுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி வத்திராயிருப்பு செம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் பாலபிரசாத்(7) மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூளைக்காய்ச்சல் அடிக்கடி வந்ததால் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மூக்கின் எலும்பு பகுதிக்கும் இடையே வாரம் இருப்பது அதன் வழியாக அடிக்கடி நோய் தொற்று வருவது தெரிய வந்தது. அதனால் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மண்டை ஓட்டின் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்து துவாரத்தை அடைத்தனர். இது போன்ற சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ. 15 முதல் ரூ. 20 லட்சம் வரை செலவாகும். முதல்வர் காப்பீடு திட்டத்தில் அரசு மருத்துவமனையில் இலவசமாகவே சிகிச்சை பெறலாம். தற்போது சிறுவன் சிகிச்சைக்கு பிறகு முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் இன்று மருத்துவர் கூறினார்.