கரூரில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜய்க்கு எதிராக விமர்சனங்கள் குவிந்தாலும் மறுபுறம் கட்சியை கூட்டணியில் சேர்க்க சில பெரிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் விஜய் இணைய போகிறார் என்ற தகவல் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயின் பிரச்சார பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் விஜய்க்கு தலைமை பண்பு கிடையாது என்று நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கெல்லாம் மத்தியில் சில கட்சிகள் விஜயை தங்களுடைய கூட்டணியில் சேர்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றன. விஜய் ஏற்கனவே பாஜகவை கொள்கை எதிரி என்றும் திமுகவை அரசியல் எதிரி என்றும் கூறிவரும் நிலையில் பாஜக கூட்டணியில் அவர் இணைவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்று கூறப்படுகிறது. மறுபக்கம் விஜயை சேர்க்கும் நோக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை விட்டுவிடும் வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என்ற கருத்தும் இதற்கு அடிப்படை காரணம்.
விஜய் தனியாக நிற்கிறார் என்றால் காங்கிரஸ், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அவருடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் விஜய் அதிமுகவுடன் சேர்ந்து விட்டால் இந்த மாற்று கூட்டணிகள் அனைத்தும் தானாகவே முடங்கிவிடும். இதன் காரணமாக விஜய் அடுத்த அரசியல் முடிவு அவருக்கானது மட்டுமல்லாமல் முழு தமிழக அரசியலுக்கும் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என தெரிகிறது. விஜய் கூட்டணி சேர்ந்தால் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு விஜய் உடன் சேர்ந்து பயணிக்க இபிஎஸ் தயாராக உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…