சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தவெகவில் ஆட்களே இல்லாததால் குதிரை பேரத்தின் மூலம் அதிமுக நிர்வாகிகளை ஆதவ் அர்ஜுனா இழுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார். இவ்வாறு குதிரை பேரத்தில் ஈடுபடுவதுதான் தூய சக்தி தவெகவா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், 1996 தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜெயலலிதாவிற்குத் துரோகம் செய்துவிட்டுச் சென்றவர்களை ஜெயலலிதா “உதிர்ந்த ரோமங்கள்” என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த அவர், தற்போதும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவிற்குச் செல்பவர்கள் உதிர்ந்த ரோமங்களே தவிர வேறில்லை என்று சாடினார்.
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, முதலில் அதிமுகவில் இணையவே முயற்சி செய்தார் என்ற திடுக்கிடும் தகவலை அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். அதிமுகவில் இணைவதற்காக அவர் ‘துணைப் பொதுச் செயலாளர்’ பதவி கேட்டுப் பேரம் பேசியதாகவும், ஆனால் திமுக மற்றும் விசிகவில் பல்வேறு முறைகேடுகளில் தொடர்புடையவர் என்பதால் அவரை அதிமுகவில் சேர்க்கவில்லை என்றும் விளக்கமளித்தார். அரசியல் ஒன்றும் லாட்டரி வியாபாரம் கிடையாது என்றும், ஆதவ் அர்ஜுனா ஒன்றும் கடவுள் இல்லை என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சிப்பதாக ஆதவ் அர்ஜுனாவும், கே.ஏ.செங்கோட்டையனும் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதை வன்மையாக மறுத்தார். இறுதியாக, அதிமுக நிர்வாகிகளையும், வேட்பாளர்களையும் தன் பக்கம் இழுக்கும் குதிரை பேர வேலைகளை ஆதவ் அர்ஜுனா இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியில், சாலையில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த நபரிடம் நூதன முறையில் பணம்…
கேரள பாஜக மாநில துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்த பிரபல மலையாள நடிகர் தேவன், அக்கட்சியின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்றும்,…
திமுக தொடக்கம் முதலே பெரியாரின் கடவுள் மறுப்பு மற்றும் பகுத்தறிவு கொள்கைகளைத் தனது அடிப்படை சித்தாந்தமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.…
மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்னணி கால்பந்து வீரரான எர்லிங் ஹாலண்ட், தனது புகழ்பெற்ற நீண்ட முடியை வெட்டி புதிய தோற்றத்திற்கு…
கினியா நாட்டின் தலைநகரான கோனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக் கிடங்கில், திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மலைபோலக் குவிக்கப்பட்டிருந்த…
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், லஞ்ச ஊழலை முற்றிலும் ஒழிக்கவும் சிங்கப்பூர் நாட்டின் கடுமையான சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என…