#image_title
காளான் சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு. தற்போதைய காலகட்டத்தில் காளான் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகவே இருந்து வருகிறது. கேரளாவை சேர்ந்த வயதான தம்பதியினர் பொழுதுபோக்காக காளான் வளர்க்கத் தொடங்கி இன்று ஒரு பெரிய பிராண்ட் உருவாக்கி சாதிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இனி காண்போம்.
கேரளாவைச் சேர்ந்த 57 வயதான ஷிஜே இல்லத்தரசி ஆவார். 65 ஆகும் அவரது கணவர் தங்கச்சன் மலையாள மனோரமா பப்ளிகேஷன் நிறுவனத்தில் மனிதவளத் துறையில் பணியாற்றியவர். கணவன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் என்ன செய்யலாம் என்று யோசித்த ஷிஜே தனது வீட்டின் பால்கனியில் காளான்களை வளர்க்கத் தொடங்கினார்.
விவசாய பின்னணியில் இருந்து வந்த ஷிஜே மற்றும் தங்கச்சன் ஆகியோருக்கு இது எளிதாக இருந்தது. ஷிஜே தனது பெரும்பாலான நேரத்தை காளான் வளர்ப்பில் செலவிட்டார். 2007 முதல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக காளான் சாகுபடி பற்றி முழுவதுமாக ஷிஜே மற்றும் தங்கச்சான் தெரிந்து கொண்டனர்.
2010 ஆம் ஆண்டு coon fresh என்ற காளான் பண்ணையை தொடங்கினர். கேரளாவின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற மற்றும் சத்தானதாக இருக்கக்கூடிய சிப்பி காளானை அவர்கள் தேர்ந்தெடுத்து வளர்த்தனர். ரூபாய் 250 மற்றும் வைத்து காளான் படுக்கைகள் அமைத்து வளர்க்க தொடங்கினர். அதற்குப் பிறகு 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டுடன் 6000 காளான் படுகைகள் வைத்து வளர்க்க தொடங்கினர் ஷிஜே மற்றும் தங்கச்சன்.
இதில் வெற்றி கண்ட ஷிஜே மற்றும் தங்கச்சன் தங்களது பிராண்டை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். ஏற்கனவே தங்கச்சன் மனோரமா என்ற பதிப்பகத்தில் பணியாற்றியதால் தங்களது தயாரிப்புகளை பற்றி கட்டுரைகளால் வெளியிட்டனர். அதற்குப் பிறகு coon freshக்கு ஆடர்கள் குவிய தொடங்கியது. போகப் போக கேரளாவில் ஊடகங்களில் எல்லா இடங்களிலும் கூன் பிரெஷ் பிரபலமானது.
அதற்குப் பிறகு கேரளாவில் முக்கிய ஷாப்பிங் மால் ஆன லூலூ இன்டர்நேஷனல் இருந்து அவர்களுக்கு ஆர்டர் வந்தது. அவர்களது தயாரிப்பை அந்த மாலில் வைப்பதற்காக அவர்கள் கேட்டு வாங்கினார்கள். தற்போது உயர் தொழில்நுட்ப காளான் பண்ணையை நிறுவி இருக்கும் ஷிஜே மற்றும் தங்கச்சன் ஆண்டுதோறும் 12 டன் காலங்களில் உற்பத்தி செய்கின்றனர்.
காளான் வளர்ப்பு மட்டுமின்றி கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இதுவரை பத்தாயிரம் பேருக்கு மேல் பயிற்சி அளித்துள்ளனர். வெறும் 250 ரூபாய் மட்டுமே வைத்து ஷிஜே மற்றும் தங்கச்சன் தற்போது ஆண்டுக்கு 90 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதை உணர்த்தி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…