நடிகை ஸ்ரீ திவ்யா வளர்ச்சியை தடுத்த வாரிசு நடிகர் – அட்ஜஸ்ட்மென்டுக்கு ஓகே சொல்லாததால் ஆத்திரத்தில் இப்படி எல்லாம் செய்தாரா?

By admin on கார்த்திகை 10, 2023

Spread the love

நடிகை ஸ்ரீ திவ்யா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு நடிகையாக வலம் வந்தவர். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் வரவே இல்லை. தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டாரா என நினைக்கும் அளவுக்கு, அவரை படங்களில் காண முடியவில்லை. இந்நிலையில், அட்ஜஸ்ட்மென்டுக்கு ஒத்துக்கொள்ளாததால், வாரிசு நடிகர் ஒருவர் அவரது வளர்ச்சியை கெடுத்து, அவப்பெயரை ஏற்படுத்தி புதிய பட வாய்ப்புகளை ஸ்ரீ திவ்யாவுக்கு கிடைக்க விடாமல் செய்த விஷயங்கள் அம்பலமாகி உள்ளது.

Sridivya

   

ஐதராபாத்தில் பிறந்த ஸ்ரீதிவ்யாவுக்கு, இப்போது 30 வயதாகிறது. 2012ல், சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதற்கு முன், சினிமாவில் நடிக்க வந்த அவரை சந்தித்த பிஆர்ஓ ஒருவர், புரொபைல் கிளாமர் ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை காட்டி படவாய்ப்பு கேட்டால், உடனே படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என கூறி இருக்கிறார். அப்படி போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரீதிவ்யா, அதை யாரிடமும் காட்டவில்லை. அவர் ஹோம்லியாக நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமே மாபெரும் வெற்றியை கொடுத்ததால், அதே வழியில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் தன் திரை பயணத்தை தொடர்ந்தார்.

   

Sridivya

 

இதற்கிடையே பிரபல நடிகரின் வாரிசு நடிகர் ஒருவர், ஸ்ரீதிவ்யாவிடம் அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைப்பு விடுத்தார். அவர் ஓகே சொல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் ஸ்ரீதிவ்யா பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்வார், அதற்கான ஏற்பாடுகளை அவரது அம்மா செய்து தருவார் என்றும் அபாண்டமாக வதந்தியை கிளப்பிவிட்டு, அவரது பெயரை டேமேஜ் செய்திருக்கிறார். புதிய பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்காதபடி தடுத்திருக்கிறார்.இதனால் கடந்த 6 ஆண்டு காலமாக பட வாய்ப்புகளின்றி இருந்த ஸ்ரீதிவ்யா நடித்த ரெய்டு படம், இப்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள ஸ்ரீதிவ்யா மீண்டும் ஒரு ரவுண்டு வர வாய்ப்புள்ளது.