‘கீதாஞ்சலி’ பட நடிகை கிரிஜாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

By Begam on கார்த்திகை 10, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜுனா, கிரிஜா நடித்த திரைப்படம் ‘கீதாஞ்சலி’. தெலுங்கில் உருவான இந்த படம் தமிழில் ’இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டது .  இந்த படத்தால் நடிகை கிரிஜாவுக்கு ரசிகர்கள் குவிந்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

   

கடந்த 1989 ஆம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே கிரிஜா நடித்தார். 2003 ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நிலையில் அவர் இங்கிலாந்து சென்று விட்டார். அங்கு அவர் பத்திரிகையாளராக பணியாற்றியதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பற்றிய எந்த தகவல்களும் இணையத்தில் வெளியாகவில்லை.

   

 

 

இந்நிலையில் தற்பொழுது அவரின் சமீபத்திய புகைப்படமும், அவரை பற்றிய தகவல்களும் நமக்கு தெரிந்துள்ளது. அதன்படி, இவர் தற்போது லண்டனில் மிகப்பெரிய எழுத்தாளராக பணியாற்றி வருவதாகவும், அங்குள்ள பிரபல பத்திரிகைக்கு கட்டுரை எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் தற்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க கம்பேக் கொடுத்திருக்கிறார்.

 

 

அதாவது, இவர் ‘இப்பனி டப்பிடா இலியாலி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், இதைத்தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.தற்பொழுது இவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.