“உலகமாக நடிப்புடா சாமி…” நடிக்குறதுக்கு ஒரு அளவு வேணாமா?… ஒரு பக்கம் காசுக்காக விளம்பரம்… மறுபக்கம் மாணவர்களுக்காக கண்ணீர்… தேவதர்ஷினிக்கு கிடைத்த மரண அடி… கொதிக்கும் நெட்டிசன்கள்…!

By Visaka on ஆடி 25, 2026

Spread the love

சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வு எதிரான மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பிரபல நடிகை தேவதர்ஷினி உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியது இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்ற நிலையில், அவரது முந்தைய விளம்பரப் படங்கள் தற்போது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. சி.ஜே.பி மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அவர், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதோடு, ஒரு தாயாக தமக்கு ஏற்பட்ட வேதனையையும் பகிர்ந்துகொண்டார். ஆனால், அவர் பேசிய சில மணி நேரங்களிலேயே, முன்பு ஒரு பிரபல நீட் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் அவர் மாணவர்களை அத்தேர்வுக்குத் தயாராகுமாறு ஊக்குவித்த பழைய வீடியோவை அரசியல் விமர்சகர் கிஷோர் கே. சாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

ஒருபுறம் நீட் தேர்வுக்கு மாணவர்களை ஈர்க்கும் வணிக விளம்பரங்களில் நடித்துவிட்டு, மறுபுறம் நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் மேடைகளில் ஏறி தாயன்போடு பேசுவது எந்த வகையில் நியாயம் என நெட்டிசன்கள் மற்றும் பலரும் கொந்தளித்து வருகின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக ஒரு நிலைப்பாட்டையும், பொதுவெளியில் அனுதாபத்தைப் பெற மற்றொரு நிலைப்பாட்டையும் எடுப்பது இரட்டை வேடமாகும் என்று சமூக வலைத்தளங்களில் தேவதர்ஷினி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் தற்போது கலை உலகிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.