யார் பண்ண வேலை இது…? “பிரியாணி சமைக்கும் விநாயகர் படம்…” நெல்லையில் சர்ச்சையை கிளப்பிய விளம்பர பேனர்… பெரும் பரபரப்பு…!!

Spread the love

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தமிழ்நாடு திருநெல்வேலியில் உள்ள பிரியாணிக் கடை ஒன்றின் முன்னால் வைக்கப்பட்ட விளம்பர பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள உணவகம் ஒன்றின் விளம்பரத்தில் “அரபிக் ஸ்டைல் 65 பிரியாணி – ரூ.99” என்ற வாசகத்துடன், விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற புகைப்படம் அச்சிடப்பட்டு வைக்கப்பட்ருந்தது. இந்த விளம்பரம் இந்துக்களின் மத உணர்வுகளையும் நம்பிக்கையையும் கடுமையாகப் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக 42 வயதான செல்வராஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட போலிஸார், சம்பவ இடத்திற்குச் சென்று அந்தச் சர்ச்சை பேனரை அப்புறப்படுத்தினர். மேலும், இது தொடர்பாக 30 வயதான கடை உரிமையாளர் ஜெயந்த் என்பவரைப் போலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர். இந்த பேனரை வடிவமைக்க உத்தரவிட்டது யார், எப்போது வைக்கப்பட்டது என்பது குறித்து நெல்லை போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

நள்ளிரவில் பயங்கரம்…! அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் படுகாயம்…. அலறி துடித்த பயணிகள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்றிரவு அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே…

29 seconds ago

இடைத்தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்…! இடதுசாரிகளுக்கு சீமான் ஆதரவு…? அனல் பறக்கும் அதிரடி பேச்சு…!!

தமிழக இடைத்தேர்தல் களம் சுடச்சுட சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு…

30 minutes ago

“கடந்த முறை 44… இப்போது 43…” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுவுக்கு பெரும் சிக்கல்… தேர்தல் களத்தில் வெடித்த பூகம்பம்…!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்…

35 minutes ago

BREAKING: துரைமுருகன் கைது…? முதல்வர் விஜயின் ஸ்கெட்ச்….  தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பு…!!

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூட பிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவை ஊழல் வழக்குகளில் முடக்குவதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவரும்…

44 minutes ago

“கலாச்சாரம் என்பது… என் மார்பகத்தை பற்றி ஏன் இவ்வளவு விவாதம்…?” ஆபாசமாக போட்டோ எடுத்த போட்டோகிராஃபர்களை கிழித்தெறிந்த ஐஸ்வர்யா லட்சுமி…!!

'பொன்னியின் செல்வன்', 'கட்டா குஸ்தி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துப் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக…

51 minutes ago

“என் கணவரை விட்ருங்க…” கெஞ்சிய கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் எட்டி மிதித்த போலீஸ்…. பிஞ்சு குழந்தையும், தாயும் பலியான சோகம்…. நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், வழக்கு ஒன்றில் தொடர்புடைய கணவரைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற போலிஸ் படையினர், அங்கே…

1 மணத்தியாலம் ago