தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த திமுக – அதிமுக ஆகிய இருதுருவ அரசியலை, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முற்றிலுமாக மாற்றிப் போட்டுள்ளன. தேர்தல் கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி, யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு மேலும் 10 எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவளித்தன. இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தார்.
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலும் கடுமையான உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் வெடித்தன. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான ஒரு பிரிவினர் தவெக ஆட்சிக்கு மறைமுக ஆதரவு அளிக்க முற்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவர்கள் மீது அதிரடி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் அனைவரும், தவெக சார்பில் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, விஜய்யின் புதிய அமைச்சரவையில் இடம் பிடித்துவிடலாம் என்றே கணக்கு போட்டிருந்தனர். ஆனால், தமிழகத்தில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், விராலிமலை, திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு, தவெகவை நம்பி பதவிகளைத் துறந்த முன்னாள் எம்எல்ஏக்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், அவர்களின் மந்திரிசபை கனவிலும் பெரும் இடியாய் இறங்கியுள்ளது.
மறுபுறம், அதிமுகவிலிருந்து விலகி வந்தவர்களுக்கு தவெகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவெகவில் அதிருப்தியாளர்கள் இணையும் விழா நடந்து வந்த நிலையில், இந்த வாரம் யாரும் கட்சியில் இணைய முன்வரவில்லை. ஏற்கனவே தவெகவிற்குச் சென்ற 6 பேருக்கு எம்எல்ஏ பதவியும் போய், கட்சியிலும் எந்தப் பொறுப்பும் கிடைக்காமல் தவித்து வருவதைப் பார்த்த சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், வீரமணி உள்ளிட்ட மேலும் 10 அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள், தற்போது தவெக நிர்வாகிகளுடன் பேசுவதைத் தவிர்த்து, தங்களின் இணைவு முடிவிலிருந்து பின்வாங்கி வருவதாகத் தெரிகிறது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக…
பாலில் உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், "அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு" என்பதற்கு ஏற்ப…
விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தில் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகள் நிறைந்திருப்பதால், தணிக்கைக் குழு இப்படத்திற்கு 'ஏ' (18 வயதுக்கு…
மிசோராமில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தின் போது, நூற்றுக்கணக்கான சிஜேபி அமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் "3 இடியட்ஸ்" திரைப்படத்தின் புகழ்பெற்ற "கிவ்…
பெங்களூரின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள தேவநஹள்ளியில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒரு பெண்…
சமீபகாலமாக பல பகுதிகளில் வீதிகளில் திரியும் தெருக்காளைகளால் பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில்,…