தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக பிரபலமான பாண்டு 1970 ஆம் ஆண்டு வெளியான மாணவன் திரைப்படத்தில் தொடங்கி 2018 வரை ஏராளமான படங்களில் பிரபல நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். அவர் தற்போது இல்லை என்றாலும் அவரது காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் நிலைத்து நிற்கிறது.
பாண்டு காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த ஓவியராகவும் விளங்கியுள்ளார். நடிகர் பாண்டுவின் சகோதரர் எம்ஜிஆரின் அலுவலகத்தில் பணிபுரிந்துள்ளார். இதனால் பாண்டுவுக்கு எம்ஜிஆர் உடன் பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
பாண்டு எம்ஜிஆரின் உருவப்படத்தை கூட வரைந்து கொடுத்துள்ளாராம். எம்ஜிஆர் மூலமாக பாண்டுவுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது 1970 இல் அதிமுக கட்சியை எம்ஜிஆர் ஆரம்பித்தார்.
அப்போது பாண்டுவை வரவழைத்து தனது கட்சிக்கு கொடியை தயார் செய்ய கூறியுள்ளார். நடிகர் பாண்டுவும் அன்றைய தினம் இரவே 10:30 மணிக்கு அதிமுக கட்சியின் கொடியை வடிவமைத்துள்ளார்.
அந்த கொடியைப் பார்த்த எம்ஜிஆர் பாண்டுவை மிகவும் பாராட்டியதோடு கட்சியின் சின்னத்தை தயார் செய்யும் பொறுப்பையும் பாண்டு இடமே ஒப்படைத்துள்ளார். இதனை பாண்டு அவர்களது மகன் பிண்டு பாண்டு பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.