செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தையும் அதன் தலைமையையும் கடுமையாகச் சாடிப் பேசினார். பிரச்சார மேடையில் உரையாற்றிய அவர், “70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும் கூட ஒரு தேசிய விருதைக் கூட வாங்க முடியவில்லை; சினிமாவிலேயே பாஸ் செய்ய முடியாதவர்கள், அரசியலில் வந்து எப்படி பாஸ் செய்யப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒரு வாரம் கூட ஓடாத நிலையில், அதன் தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, இதனால் நாடு எப்படி உருப்படும் என்றும் காரசாரமாகக் விமர்சித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகளையும், கரூரில் நடந்த அசம்பாவிதத்தையும் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, “கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் அவசர அவசரமாக விமானமேறி வீட்டிற்குச் சென்றவர்தான் தவெக தலைவர்” என்று குற்றம்சாட்டினார். தனது சொந்தக் கூட்டத்திற்கு வந்த தொண்டர்களையே காப்பாற்ற முடியாதவர்கள், தமிழக மக்களை எவ்வாறு காப்பாற்றுவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், நூறு விஜய் வந்து பிரச்சாரம் செய்தாலும், எடப்பாடி தொகுதியில் அதிமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என்றும், தான் எடப்பாடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்தும் பேசினார்.
தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், ஏதோ ஒரு தற்செயல் விபத்தினால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துவிட்டதாகக் கூறினார். தவெக ஆட்சி அமைத்த பிறகு மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாகச் சாடிய பழனிசாமி, சட்டமன்றம் தற்போது ஒரு பட்டிமன்றமாக மாறிவிட்டது என்றும், பிள்ளை பிடிப்பது போல மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தவெக பிடித்து இழுப்பதாகவும் கடுமையாகக் குற்றம்சாட்டினார். முதலமைச்சரின் உத்தரவால் வீரமணி கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் கருத்து பொய் என்றும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சினிமா புகழைக் கொண்டு அரசியலில் தடம் பதிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக மட்டுமே மக்களுக்கான உண்மையான பேரியக்கம் என்பதை இந்தத் தேர்தல் மீண்டும் நிரூபிக்கும் என்றார். களத்தில் நின்று மக்களுக்காக உழைக்காமல், விளம்பர வெளிச்சத்தில் மட்டுமே அரசியல் நடத்துபவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், எடப்பாடி தொகுதி என்றும் அதிமுகவின் கோட்டையாகவே திகழும் என்றும் கூறி தனது பிரச்சார உரையை நிறைவு செய்தார்.
திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…
மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னன், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30…
மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…