நள்ளிரவு 9 மணி… பொத்தென இடிந்த கட்டிடம்…. சென்னை பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்….!

Spread the love

சென்னை பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் படிக்கட்டு திடீரென இடிந்து விழுந்ததில் வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டினப்பாக்கம் பகுதியில் நம்பிக்கை நகர், முள்ளிமா நகர், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் வசிக்கின்றனர். மேல்தளத்தில் உள்ள தனது நண்பரைச் சந்திக்க இரவு 9 மணியளவில் படிக்கட்டில் ஏறியபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. சப்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்தவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பழுதடைந்த குடியிருப்புகளைச் சீரமைக்காமல் ஏழை மீனவ மக்களின் உயிருடன் அரசு விளையாடுவதாக அவர் குற்றம் சாட்டினார். எளிய மக்களின் வீடுகளைச் புனரமைக்க முன்வராத அரசு, ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டத் திட்டமிடுவது வேடிக்கையானது என்றும், விபத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான பவுல்ராஜ் என்பவர் ஊடகங்களிடம் பேசுகையில், விபத்து நடந்து பல மணி நேரம் ஆகியும் அதிகாரிகளோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ சம்பவ இடத்திற்கு வரவில்லை என வேதனை தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்ள முயன்றும் உரிய பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், ‘அடிப்படை வசதியான இருப்பிடத்திற்கே வழியில்லாத சூழலில், பிரம்மாண்ட திட்டங்களுக்கு அரசு ஆசைப்படுகிறது; எங்களை எந்த அரசும் மனிதர்களாகக்கூட மதிப்பவதில்லை’ எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள இக்குடியிருப்புகளில் வாழும் மக்கள், மாற்று இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்படுவதாகக் கூறும் குடியிருப்பாளர்கள், தங்களின் வாழ்வாதாரப் பகுதியிலேயே பாதுகாப்பான புதிய வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவ மக்களின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ள நிலையில், சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

Nanthini

Recent Posts

ஆற்றில் மூழ்கியது எப்படி?… சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்… 4 பேர் உயிரிழந்த கோர சம்பவம்… மீட்பு படையினர் தீவிர தேடுதல்…!!

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள கங்கனானி பகுதியில், கர்மகுண்டிலிருந்து டப்ரானி செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த இன்னோவா கார் ஒன்று திடீரென…

5 minutes ago

இரக்கமே இல்லாத செயல்… முகத்தில் விழுந்த ஒற்றை அறை… சுருண்டு விழுந்த குழந்தை… நடந்தது என்ன?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பிஞ்சுக் குழந்தையின் மீது நடத்தப்படும் எத்தகைய வன்முறையும் மனிதநேயத்திற்கே பெரும் இழுக்காகும். தற்காத்துக் கொள்ளத் திராணியற்ற ஒரு சிறு குழந்தையின்…

21 minutes ago

பெற்றோர்களே உஷார்!… இதுதான் காரணமா?… அங்கே நடந்தது என்ன?… மாணவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்… கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்…!!

அஹுவாகாட்லான் பகுதியில் உள்ள பொது இடத்தில் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்பட்ட பள்ளி மாணவர்கள் மூவரை உள்ளூர் பாதுகாப்புப் படையினர்…

43 minutes ago

‘ஆபரேஷன் டைகர்’… ஊருக்குள் பட்டப்பகலில் 4 புலிகள் உலா… விவசாயி மீது வெறித்தனமான தாக்குதல்… நடுக்கத்தில் கிராம மக்கள்… வைரலாகும் ட்ரோன் காட்சிகள்…!!

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள அகலா கிராமப் பகுதியில், ஒரே இடத்தில் நான்கு புலிகள் நடமாடுவது அங்கு பறக்கவிடப்பட்ட…

52 minutes ago

பழைய பகையா?… கடையில் நடந்தது என்ன?… நடுரோட்டில் பட்டப்பகல் வெறிச்செயல்… 7 பேர் கொண்ட கும்பல் செய்த அதிர்ச்சி காரியம்…!!

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்திற்குட்பட்ட மஹமதாபாத் - பிதாய் வழித்தடத்தில் இயங்கி வரும் 'கோடல் ஜெனரல் ஹார்டுவேர் அண்ட் பஞ்சர்…

59 minutes ago

ரூ.100 கோடி மோசடி வழக்கில் பகீர் திருப்பம்…. அரசகுமார் மீது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவுட் ஆஃப் தி பாக்ஸ் அட்டாக்….. வெடிக்கும் வாதங்கள்…!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக…

59 minutes ago