போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை உதவித்தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம், சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் இதுபோன்ற பல கல்வி உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் கல்வியாண்டின் உதவித்தொகை திட்டத்திற்கு 15.08.2025 தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் ஏற்கனவே பயின்று வரும் மாணவ மாணவிகள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டி தேவையில்லை. கல்லூரிகள் மூலமாகவே உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்காமல் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டும் நோடல் அலுவலரை (Nodal Officer) அணுகி UMIS(University management information system) (https://umis.tn.gov.in) என்ற இணையதளத்தில் பயின்று வரும் கல்லூரி மூலமாகவே கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித் தொகைக்கு
விண்ணப்பிக்க:
1. ரூ.2.50 இலட்சத்திற்குள் பெற்றோரின் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.
2. வருமானச் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழை இணைத்து வைத்திருக்க வேண்டும்.
3. மாணவர்களின் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உதவித்தொகை திட்டம் விண்ணப்பிக்க:
1. ஒன்றிய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை (SC/ST)
2. போஸ்ட் மெட்ரிக் கல்வி ஊக்கத்தொகை மாநில அரசு(SCC)
3. உயர்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை (அரசு , அரசு உதவி பெறும் , ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்கள் மட்டும்)
4. கற்பிப்பு கட்டணம் (அரசு , அரசு உதவி பெறும் , ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மட்டும்.
5. பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கான சிறப்புக் கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் (அரசு, அரசு உதவி பெறும், ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்கள் மட்டும்)
6. முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவியர்களுக்கு சிறப்பு கட்டணம் , தேர்வு கட்டணம் (அரசு, அரசு உதவி பெறும், ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டும்).
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ். கீர்த்தனா, மிகச் சரளமான ஹிந்தியில் பேசும் வீடியோ…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் 'வர்மாலா'…
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகளான CPI மற்றும் CPM அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள்…
சமீபகாலமாக வினோதமான 'ஃபுட் ஃப்யூஷன்' வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில், தற்போது கரும்புச் சாற்றில் மட்டர் பன்னீர்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்…
திருமண உறவுகளையும் குடும்ப கௌரவத்தையும் சுக்குநூறாக உடைக்கும் வகையில், 28 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது 18 வயது…